search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு - 20 வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை
    X

    தொழிலதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு - 20 வட மாநில தொழிலாளர்களிடம் விசாரணை

    • கைரேகை சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் கிடைக்காததால் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் தொழிலதிபர்.இவர் வீட்டில் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவரது ஒரு மகன் சென்னையிலும் மற்றொரு மகனும் மகளும் வெளி நாட்டிலும் படித்து வரு கிறார்கள்.சென்னையில் படித்து வரும் மகனை பார்ப்பதற்காக முருகன் மனைவியுடன் சென்றி ருந்தார். அப்போது முருகனின் தந்தை பூதலிங்கம் மகனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு மற்றும் நிதி நிறுவனத்தின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து ராஜாக்க மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி கைவரிசை காட்டி இருந்தனர். 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    முருகன் வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

    இது தொடர்பாக போலீசார் வட மாநில தொழி லாளர்கள் 20 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா வின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கேமராவில் கொள்ளையர்கள் வந்த காட்சிகள் எதுவும் பதிவாக வில்லை. எனவே கொள்ளை யர்கள் முருகனின் வீட்டின் பின்பகுதி வழியாக புகுந்து இருக்கலாம் என்று கருது கிறார்கள். எனவே பின்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகள் எதுவும் சிக்காத நிலையில் கைரேகையும் கிடைக்காததால் போலீ சாருக்கு குற்ற வாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை கைது செய்ய அடுத்த கட்ட நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொள்ளையர்கள் முருகனின் வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்ற நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் இருந்த 3½ கிலோ நகைகள் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×