search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருந்திருவிழா"

    கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
    மதுரை

    மதுரை கூடலழகர் பெரு மாள் கோவில் வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வைகாசி பெருந்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும்‌. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.

    14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மாலையில் அனு மார், கருடன், சேஷ, குதிரை உள்ளிட்ட  பல்வேறு வாகன ங்களில் பெரு மாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். வருகிற 10-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் 13-ந் தேதி நடக்கிறது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காலை 6:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 14 -ந் தேதி மாலை 7 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி காலையில் தீர்த்தவாரி முடிந்து குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.

    அன்றிரவு கோவில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 17-ந் தேதி மாலையில் விடையாற்றி உற்சவமும், 18-ந் தேதி உற்சவ சாந்தி, அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசாமி, உதவி ஆணையர் செல்வி மற்றும் பட்டர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    ×