தொழில்நுட்பம்
ரியல்மி ஜிடி ஸ்மார்ட்போன்

ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2021-11-19 11:29 GMT   |   Update On 2021-11-19 11:29 GMT
ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


ரியல்மியின் புதிய ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கெண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களில் ரியல்மி ஜிடி 2 ப்ரோ மாடலில் எல்.பி.டி.டி.ஆர்.5 ரேம், யு.எப்.எஸ். 3.1 பிளாஷ் மெமரி, 6.51 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.



புகைப்படங்களை எடுக்க 50 எம்பி, 8 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா சென்சார்கள், முன்புறம் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆட்டோபோக்கஸ், ஓ.ஐ.எஸ். மற்றும் இ.ஐ.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News