தொழில்நுட்பம்

இந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

Published On 2019-05-09 05:21 GMT   |   Update On 2019-05-09 05:21 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பதாக அறிவித்துள்ளது. #Nokia



நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா 6.1 பிளஸ் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.

அறிமுகமானது முதல் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. புதிய விலை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.

நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் வேரியண்ட் மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,750 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. விலை குறைப்பை பெற வாடிக்கையாளர்கள் DEAL1750 குறியீடை பயன்படுத்த வேண்டும்.



விலை குறைப்பு மட்டுமின்றி ஏர்டெல் பயனர்களுக்கு கூடுதலாக ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ரூ.50 மதிப்புள்ள வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது. இதற்கு பயனர்கள் ரூ.199, ரூ.249 அல்லது ரூ.448 சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்யும் போது 240 ஜி.பி. இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

விலைகுறைப்பின் படி நோக்கியா 5.1 பிளஸ் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.8,849-க்கும், நோக்கியா 6.1 பிளஸ் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,749-க்கும் கிடைக்கிறது. இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் புதிய விலை நோக்கியா வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பயனர்கள் பிரத்யேக குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News