தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கு அமேசான் யு.பி.ஐ. வெளியானது

Published On 2019-02-15 04:25 GMT   |   Update On 2019-02-15 04:25 GMT
அமேசான் நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் செய்யும் அமேசான் பே யு.பி.ஐ. ஆப் ஆண்ட்ராய்டு வலைதளங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. #AmazonPay



ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அமேசான் நிறுவனம் அமேசான் பே யு.பி.ஐ. அறிமுகம் செய்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு யு.பி.ஐ. ஐ.டி.க்களை வழங்க அமேசான் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்திருக்கிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை அமேசான் மொபைல் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து அதிவேக பணபரிமாற்றங்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அமேசான் பே யு.பி.ஐ. ஐ.டி. கொண்டு அமேசான் வலைதளத்தில் பொருட்களை வாங்கவோ, அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் போதோ, ரீசார்ஜ் அல்லது கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து செலுத்த முடியும்.



அமேசான் பே யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் மொபைல் வெரிஃபிகேஷன் மற்றும் யு.பி.ஐ. பின் பதிவிட்ட பின்னரே உறுதிசெய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை ஒருமுறை இணஐத்துக் கொண்டு யு.பி.ஐ. பின் செட்டப் செய்துவிட்டால், பின் இதை கொண்டு பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். 

பிம் யு.பி.ஐ. வழிமுறையை டிஜிட்டல் பேமென்ட் முறையாக பயன்படுத்த அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இது பயன்தரும் சேவையாக இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் பே யு.பி.ஐ. தளம் மூலம் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான் பே யு.பி.ஐ. பணபரிமாற்றங்களை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இருந்து அமேசான் சேவையில் லாக் இன் செய்து கொண்டு யு.பி.ஐ. சேவையை பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் அமேசானில் பொருட்களை வாங்கி, புதிய யு.பி.ஐ. மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.
Tags:    

Similar News