தொழில்நுட்பம்

டூயல் கேமரா, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-01-17 05:42 GMT   |   Update On 2019-01-17 05:42 GMT
விவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டூயல் பிரைமரி கேமரா மற்றும் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. #Vivo #smartphone



விவோ நிறுவனம் தனது வை சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

விவோ வை91 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக ஹாலோ ஃபுல்வியூ டிஸ்ப்ளே, ஹீலியோ P22 ஆக்டா-கோர் 12 என்.எம். பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 4.5, 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க 8 எம்.பி. முன்பக்க கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி, பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



விவோ வை91 சிறப்பம்சங்கள்:

- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12 என்.எம். பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி

விவோ வை91 ஸ்மார்ட்போன் ஸ்டேரி பிளாக் மற்றும் ஓசன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ அதிகாரப்பூர்வ வலைதளம், பேடிஎம் மற்றும் அமேசான் இந்தியா போன்ற வலைதளங்களங்களிலும், ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் விவோ வை91 ஸ்மார்ட்போன் ரூ.10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுக சலுகைகள்:

- ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 3000 ஜி.பி. டேட்டா மற்றும் ரூ.4000 மதிப்புள்ள பலன்கள்
- ஏர்டெல் வழங்கும் ரூ.2000 கேஷ்பேக் மற்றும் 240 ஜி.பி. டேட்டா
- பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.400 கூடுதல் தள்ளுபடி மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி
Tags:    

Similar News