தொழில்நுட்பம்

ரூ.4000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-01-05 05:11 GMT   |   Update On 2019-01-05 05:11 GMT
இந்தியாவில் சோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #Xolo #smartphone



இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பின் சோலோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. சோலோ இரா 4எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, இரு கேமரா சென்சார்களுக்கும் எல்.இ.டி. ஃபிளாஷ், டூயல் 4ஜி வோல்ட்இ, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

புதிய சோலோ ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில், ஸ்மார்ட்போனின் பாதுகாப்பிற்கு ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



சோலோ இரா 4எக்ஸ் சிறப்பம்சங்கள்

- 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சோலோ இரா 4எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.4,444 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சோலோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மெமரி மற்றும் ரேம் விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News