தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் டூயல் கேமரா, ஏ.ஐ. வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த விவோ

Published On 2018-12-23 06:37 GMT   |   Update On 2018-12-23 06:37 GMT
விவோ நிறுவனத்தின் வை சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாட்டர் டிராப் வடிவில் நாட்ச் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் வை93 என அழைக்கப்படுகிறது. #VivoYSeries #smartphone



விவோ நிறுவனம் வை சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சத்தமில்லாமல் அறிமுகமாகி இருக்கும் வை93 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

விவோ வை93 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் 720x1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க விவோ வை93 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக், ஏ.ஐ. பியூட்டிஃபிகேஷன் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.



விவோ வை93 சிறப்பம்சங்கள்:

- 6.22 இன்ச் 720x1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
- மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக்
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி. வசதி
- ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 4.5

இந்தியாவில் விவோ வை93 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ வை93 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News