தொழில்நுட்பம்

ரூ.6000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-12-14 06:10 GMT   |   Update On 2018-12-14 06:10 GMT
மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 ஸ்மார்ட்போனினை ஃபேஸ் அன்லாக் வசதியுடன் அறிமுகம் செய்துள்ளது. #smartphone



மொபிஸ்டார் நிறுவனம் இந்தியாவில் சி1 என்ற பெயரில் புது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 5.34 இன்ச் FWVGA+ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் குவாட்கோர் மீடியாடெக் MT6739 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் கொண்டுள்ளது. புது ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படாமல், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



மொபிஸ்டார் சி1 ஷைன் சிறப்பம்சங்கள்:

- 5.34 இன்ச் 480x960 பிக்சல் FWVGA+ 18:9 டிஸ்ப்ளே
- 1.28 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மொபிஸ்டார் சி1 ஷைன் ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.6,100 விலையில் கிடைக்கும் மொபிஸ்டார் சி1 ஸ்மார்ட்போன் டிசம்பர் 15 முதல் நாடு முழுக்க சுமார் 500க்கும் அதிக விற்பனையாளர்களிடம் கிடைக்கும். #smartphone
Tags:    

Similar News