தொழில்நுட்பம்

ரூ.5,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-12-12 09:41 GMT   |   Update On 2018-12-12 09:41 GMT
தம்போ நிறுவனம் இந்தியாவில் டி.ஏ.-40 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #smartphone



தம்போ நிறுவனம் தனது புது ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, குவாட்-கோர் சிப்செட், 1 ஜி.பி.ரேம், 5 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போனில் 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



தம்போ டி.ஏ. 40 சிறப்பம்சங்கள்:

- 5.45 இன்ச் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ கோ எடிஷன்)
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

தம்போ டி.ஏ. 40 ஸ்மார்ட்போன் புளு மற்றும் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #smartphone
Tags:    

Similar News