தொழில்நுட்பம்

டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2018-12-04 06:35 GMT   |   Update On 2018-12-04 06:35 GMT
ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் தனது புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. #Samsung



சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங்கின் புது கேலக்ஸி ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா வழங்குகிறது. 

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.



அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.

சாம்சங் மற்றும் ஹூவாய் என இரு நிறுவனங்களுக்கும் போ (BOE) எல்.சி.டி. டிஸ்ப்ளேவினை விநியோகம் செய்ய இருக்கிறது. எனினும், நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.



சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விவரங்கள் அடுத்த வாரம் தெரிந்து விடும். #GalaxyA8s #smartphone
Tags:    

Similar News