தொழில்நுட்பம்

பதவி விலகும் எண்ணமில்லை மார்க் சூக்கர்பர்க் விளக்கம்

Published On 2018-11-21 13:18 GMT   |   Update On 2018-11-21 13:18 GMT
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பதிவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார். #Facebook #MarkZuckerberg



ஃபேஸ்புக் நிறுவனத்தில் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இது குறித்த கேள்விக்கு, தற்சமயம் 'ஃபேஸ்புக் தலைமை பொறுப்பில் இருந்து பதவி விலகுவது குறித்து எந்த திட்டமும் இல்லை' என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதில் அளித்து இருக்கிறார்.

'இத்துடன் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான ஷெரில் சான்ட்பெர்க்கும் தன்னுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என அவர் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஷெரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், பல முக்கிய திட்டங்களுக்கு அவர் தலைமை வகிக்கிறார்,' என அவர் தெரிவித்தார். 



'கடந்த பத்து ஆண்டுகளாக ஷெரில் எனக்கு மிகவும் முக்கியமான சக பணியாளராக இருக்கிறார். அவரது பங்களிப்பு மற்றும், நாங்கள் இருவரும் மேற்கொண்ட பணிகளை பார்த்து பெருமை கொள்கிறேன், மேலும் நாங்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றுவோம் என நம்புகிறேன்,' என அவர் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டு, வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய உதவியாக இருந்தது என்ற குற்றச்சாட்டு அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு முதல் அடியாக அமைந்தது. பின் இதில் தொடர்புடைய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்ட நடவடிக்கையில் பலர் தொடர்ந்து சிக்கியதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் களவாடப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி, இவற்றில் சிலவற்றை ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டு அவற்றை சரி செய்வதாக தெரிவித்து இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் மிகப்பெரும் பிரச்சனைகள் இருக்கிறது, அதை நான் இல்லை என்று கூறவில்லை.. எனினும், ஃபேஸ்புக் பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மை இருந்தாலும், அவை அனைத்தும் உண்மை இருப்பதாக என நான் நினைக்கவில்லை. என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News