தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்கள் - விரைவில் புது அப்டேட்

Published On 2018-10-20 09:33 GMT   |   Update On 2018-10-20 09:33 GMT
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. புதிய அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இதற்கான அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp



வாட்ஸ்அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும்.

புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வேகெஷன் மோட் பயனுள்ளதாக இருக்கும். தற்சமயம் சோதனை செய்யப்படும் வேகெஷன் மோட் இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோன்று, ஆன்டராய்டு தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட சாட்களுக்கு ஆப் பேட்ஜ்களை மறைக்க வழி செய்கிறது.


புகைப்படம் நன்றி: WABetaInfo

இதேபோன்று வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை வெளிப்புற சேவைகளுடன் இணைக்கக் கோரும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலிக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த அம்சம் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. லின்க்டு அக்கவுன்ட் ஆப்ஷன்கள் ப்ரோஃபைல் செட்டிங்களின் கீழ் வழங்கப்படுகிறது. தற்சமயம் இன்ஸ்டாகிராம் மட்டுமே எக்ஸ்டெர்னல் சேவையாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாட்ஸ்அப் அக்கவுன்ட்டில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை இணைக்க முடியும்.

லின்க்டு அக்கவுன்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மீட்க முடியும். இதை கொண்டு நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்ய முடியும். புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுவதால், இவை பயனர்களுக்கு வழங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
Tags:    

Similar News