தொழில்நுட்பம்

6 ஜி.பி. ரேம், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட ஷார்ப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-10-04 11:00 GMT   |   Update On 2018-10-04 11:00 GMT
ஷார்ப் நிறுவனத்தின் புதிய அக்வோஸ் சீரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #smartphone



ஷார்ப் நிறுவனம் அக்வோஸ் சீரோ எனும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது OLED பேனல் கொண்ட ஷார்ப் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்திருக்கிறது.

புதிய ஷார்ப் அக்வோஸ் சீரோ ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் WQHD பிளஸ் 1440x2992 பிக்சல் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 3130 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

சமீபத்தில் வெளியான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் மிகவும் எடை குறைந்த மாடல்களில் ஒன்றாக ஷார்ப் அக்வோஸ் சீரோ இருக்கிறது. இதில் புகைப்படங்களை எடுக்க 22.6 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. அக்வோஸ் சீரோ மாடல் IP69 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டுள்ள நிலையில், ஷார்ப் அக்வோஸ் சீரோ மாடலின் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



ஷார்ப் அக்வோஸ் சீரோ சிறப்பம்சங்கள்:

- 6.22 இன்ச் 1440x2992 பிக்சல் WQHD+ OLED டிஸ்ப்ளே
- 2.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 9.0 (பை)
- 22.6 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் IPX5/IPX8/IP6X
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோஃபோனிக் தொழில்நுட்பம், டால்பி அட்மோஸ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ஜி.பி.எஸ்.
- 3,130 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஷார்ப் அக்வோஸ் சீரோ ஸ்மார்ட்போன் ஜப்பானில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இதன் சரியான வெளியீட்டு தேதி, விலை மற்றும் இதர சந்தைகளின் வெளியீட்டு விவரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News