தொழில்நுட்பம்

கேலக்ஸி எஸ்9 போன்களை இலவசமாக வழங்கும் சாம்சங் - இப்படியும் விளம்பரம் செய்யலாமா?

Published On 2018-09-30 07:27 GMT   |   Update On 2018-09-30 07:27 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை இலவசமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #GalaxyS9



தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் தனது புதிய விளம்பர யுக்தியை அறிவித்துள்ளது. அதன்படி நெதர்லாந்தில் உள்ள சிறிய கிராமத்திற்கு சென்ற சாம்சங் அங்கு வசிப்பவர்களுக்கு 50 புத்தம் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த உலகம் முழுக்க சிறிய போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதை பின்பற்றி வரும் நிலையில், சாம்சங் இதே வழிமுறையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நெதர்லாந்தில் சாம்சங் சென்று இருக்கும் கிராமத்தின் பெயர் அப்பெல் அதாவது தட்சு மொழியில் ஆப்பிள் என பொருள் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்திற்காகவே சாம்சங் அங்கு 50 கேலக்ஸி எஸ்9 யூனிட்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 



இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, கிராமத்தில் வசிக்கும் 312 பேரில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு புதிய கேலக்ஸி எஸ்9 யூனிட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் புதிய ஸ்மார்ட்போன்கள் வழங்கும் தருணங்களை சிறிய வீடியோவாக சாம்சங் நெதர்லாந்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வீடியோ ஆப்பிள் சமூகம் சாம்சங்கிற்கு மாறுகிறது என்ற தலைப்பில் துவங்குகிறது. 

சாம்சங் பதிவிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்..,

<div data-align="center">
<object data-height="360">
<embed src="https://www.youtube.com/v/WLEZAbfBDl4?rel=0" data-height="360px" data-width="100%" />
</object>
</div>
Tags:    

Similar News