தொழில்நுட்பம்

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2018-09-25 06:55 GMT   |   Update On 2018-09-25 06:55 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன் பவர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MotorolaOnePower



மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யதது. முன்னதாக ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஒன் பவர் மாடலில் 6.2 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றுள்ளது.

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படுகிறது.

ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதில் மோட்டோரோலா அனுபவங்களை வழங்கும் சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

- 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ
- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்
- கைரேகை சென்சார்
- P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் மோட்டோரோலா ஒன் பவர் விற்பனை அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பவர் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News