தொழில்நுட்பம்

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-08-21 08:09 GMT   |   Update On 2018-08-21 08:09 GMT
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. #NokiaMobile


ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் நோக்கியா X6 என்ற பெயரில் அறிமுகம் செயய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் கொண்டிருக்கும் நோக்கியா 6.1 பிளஸ் மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், 2.5D வளைந்த கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.


 
நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி



இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 30-ம் தேதி முதல் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.
Tags:    

Similar News