தொழில்நுட்பம்

மெசன்ஜரில் புது அப்டேட் - இனி ஏ.ஆர். கேம்ஸ் விளையாடலாம்

Published On 2018-08-09 10:36 GMT   |   Update On 2018-08-09 10:45 GMT
ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
Tags:    

Similar News