தொழில்நுட்பம்

இந்தியாவில் ஹானர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-07-24 10:34 GMT   |   Update On 2018-07-24 10:34 GMT
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Honor9N #smartphone



ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சீனாவில் ஹானர் 9i (2018) என்ற பெயரில் அறிமுகமான ஸ்மார்ட்போனின் சர்வதேச வெர்ஷனாக ஹானர் 9N அறிமுகமாகியுள்ளது.

புதிய ஹானர் 9N ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் 19:9 நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, கிரின் 659 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



ஹானர் 9N சிறப்பம்சங்கள்:

- 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட்
- மாலி T830-MP2 GPU
- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- ரைட் மோட், பார்டி மோட்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



அறிமுக சலுகைகள்

- ஜியோ பயனர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது
- ஜியோ பயனர்களுக்கு 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா
- மிந்த்ரா வழங்கும் ரூ.1200 மதிப்புடைய வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.

ஹானர் 9N ஸ்மார்ட்போன் லாவென்டர் பர்ப்பிள், ராபின் எக் புளு, சஃபையர் புளு மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வேரியன்ட் விலை ரூ.11,999, 4 ஜிபி ரேம் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.13,999 மற்றும் 128 ஜிபி வேரியன்ட் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹானர் 9N ஸ்மார்ட்போன் ஜூலை 31-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. #Honor9N #smartphone
Tags:    

Similar News