தொழில்நுட்பம்
கோப்பு படம்

அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்

Published On 2018-06-16 09:37 GMT   |   Update On 2018-06-16 09:37 GMT
ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியின் புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.


ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியில் கூகுள் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் வழிமுறையை மாற்றியிருக்கிறது.

ஜிமெயில் இன்பாக்ஸ்-இல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை பெறும் போது, அதனை செயலி சரியாக கண்டறிந்து கொள்ளும். ஜிமெயிலின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீங்கள் முதலில் படிக்க விரும்பும் மின்னஞ்சல்களை கண்டறியும்.

புதிய அம்சத்தை செயல்படுத்த ஐஓஎஸ் தளத்தின் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் மெனு -- நோட்டிஃபிகேஷன் -- ஹை ப்ரியாரிட்டி ஒன்லி (ஏettings menu -- Notifications -- High priority only) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 



முதற்கட்டமாக இந்த அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது டீஃபால்ட் அம்சம் கிடையாது என்பதால், பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மெனு சென்று தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும் என கூகுள் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News