தொழில்நுட்பம்

இந்தியாவில் MIUI 10 வழங்கும் விசேஷ அம்சங்கள்

Published On 2018-06-08 12:11 IST   |   Update On 2018-06-08 12:11:00 IST
சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளீயீடு இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதில் MIUI 10 தளத்துக்கான இந்திய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
புதுடெல்லி:

சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளியீடு ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் நேற்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. புதிய MIUI 10 தளத்தில் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ஜெஸ்ட்யூர்கள் கொண்ட ஃபுல் ஸ்கிரீன் அனுபவம், இயற்கை ஒலி, ஆம்பியன்ட் நாய்ஸ், செயற்கை நுண்ணறிவு மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

வழக்கம்போல இம்முறையும் புதிய MIUI 10 தளத்தில் இந்திய பயனர்களுக்கென விசேஷ அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பயனர்கள் நேரடியாக கேமரா ஆப் மூலம் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய முடியும், அதிநவீன இணைய வசதி, மெசேஜிங் சேவையில் க்விக் மெனுக்கள், Mi மியூசிக் மற்றும் Mi வீடியோ செயலிகளில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பிராந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

புதிய MIUI 10 தளத்தில் கேமரா ஆப் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து நேரடியாக பேடிஎம் ஆப் மூலம் செக்-அவுட் செய்யும் வசதியை வழங்குகிறது. 



மெசேஜிங் க்விக் மெனு

எஸ்எம்எஸ் சென்டர் ஐடி மற்றும் காலர் ஐடி அம்சங்கள் ஏற்கனவே MIUI தளத்தில் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சென்டர் ஐடி தற்சமயம் 65% ஐடென்டிஃபை ரேட் கொண்டுள்ளது. MIUI 10 தளத்தில் வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு ரிப்ளை பட்டன்கள் நீக்கப்பட்டு க்விக் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை க்ளிக் செய்யும் போது குறிப்பிட்ட வலைத்தளங்கள், செயலிகள் அல்லது அருகாமையில் உள்ள ஏடிஎம் மையங்களை கூகுள் மேப்ஸ் மூலம் பார்க்க முடியும்.

இந்த அம்சம் உங்களுக்கு வரும் குறுந்தகவலை யார் அனுப்புகின்றார்கள் என்பதன் அடிப்படையில் வேறுபடும். தற்சமயம் க்விக் மெனு இந்தியாவில் 100-க்கும் அதிக சேவைகளுக்கு கிடைக்கிறது. 

MIUI 10 தளத்தில் உங்களுக்கு வரும் ரயில் டிக்கெட் எஸ்எம்எஸ்-களை தானாக அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள தகவல்களை சிறப்பான முறையில் கார்டுகளாக மாற்றிவிடும். 



பிரவுசர்களில் வெப் ஆப்

ப்ரோகிரெசிவ் வெப் ஆப் சப்போர்ட் ப்ளிப்கார்ட், ஓலா, ஓயோ மற்றும் இதர சேவைகளை செயலிகளை பயன்படுத்துவதை போன்றே இயக்க முடியும். இதற்கு நீங்கள் கூடுதலாக எதையும் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த அம்சம் இந்தோனேஷியாவிலும் வழங்கப்படுகிறது.

சியோமி நேற்று (ஜூன் 7, 2018) அறிமுகம் செய்த MIUI 10 பீட்டா ஜூன் 14-ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. இதன் ஸ்டேபிள் வெளியீடு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News