தொழில்நுட்பம்

இந்தியாவில் விவோ வை83 பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-06-01 12:58 IST   |   Update On 2018-06-01 12:58:00 IST
விவோ நிறுவனத்தின் வை83 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

விவோ நிறுவனத்தின் வை83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட வை83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வை83 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.15மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 88% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 4 மூலம் இயங்கும் விவோ வை83 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிரர் பேக் கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கோணங்களில் ஸ்மார்ட்போனின் பின்புறம் வெளிச்சம் படும்போது நிறம் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



விவோ வை83 சிறப்பம்சங்கள்:

- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3260 எம்ஏஹெச் பேட்டரி

இந்தியாவில் விவோ வை83 ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் விவோ வை83 விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News