அறிந்து கொள்ளுங்கள்

சிறு ஸ்மார்ட்போன்களை மக்கள் விரும்புவதில்லை?

Published On 2022-07-01 11:45 GMT   |   Update On 2022-07-01 11:45 GMT
  • அளவில் சிறிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஐபோன்கள் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது.
  • ஓராண்டு மற்றும் அதற்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் தற்போதும் அதிக விலையிலேயே விற்கப்படுகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்கள் அளவில் பெரிதாகி விட்டன. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், அளவில் நம் கைகளை விட மிக பெரியதாக உள்ளன.

சந்தையில் அறிமுகமாகும் புது ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவை 6.0 இன்ச் மற்றும் அதற்கும் பெரிய திரை கொண்டுள்ளன. கையடக்க அளவில் கிடைத்து வந்த மொபைல் போன்கள், இன்று அளவில் பெரிதாகி கொண்டே வருகின்றன. இது ஒருசிலருக்கு பெரிய வடிவமாக உள்ளது.

அளவில் சிறிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. மிக சொற்ப ஸ்மார்ட்போன்கள் மட்டுமே ஓரளவு சிறிய அளவில் வெளியாகின்றன. அதிலும் பெரும்பாலான போன்கள் ஆப்பிள் நிறுவனம் வெளியிடுவது தான் எனலாம். இத்தகைய போன்கள் விலை உயர்ந்தவையாக இருப்பதால் சாமானிய மக்களுக்கு எட்டா கனியாக உள்ளது.



ஆப்பிள் நிறுவன மாடல்கள் ஓராண்டு மற்றும் அதற்கும் பழைய ஸ்மார்ட்போன்கள் தற்போதும் அதிக விலையிலேயே விற்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் புது போன்கள் வெளிவரும் போதும் பழைய போன்கள் ஓரளவே விலை குறைக்கப்படுகிறது, குறிப்பாக ஆப்பிள் இதனை தனது வியாபார தந்திரமாகவே வைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன்கள் பெரும்பாலும் 6.4 இன்ச் திரை கொண்டுள்ளன. அதிலும் 6.2 மற்றும் 5.8 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்களை கூகுள், அசுஸ் என குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே இன்றும் வெளியிடுகின்றன. அளவில் சிறிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர்களுக்கு ஐபோன்கள் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது.

Tags:    

Similar News