அறிந்து கொள்ளுங்கள்
Spotify-ல் நீங்கள் கேட்கும் பாடல்களை இனி Instagram-ல் பகிரலாம் - புதிய அப்டேட் கொடுத்த மெட்டா
- Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வருகின்றனர்.
- இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.
அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், Spotify-ல் நீங்கள் கேட்கும் பாடல்களை இன்ஸ்டாகிராம் Notes-ல் பகிரும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா வெளியிட்டுள்ளது.
Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வரும் நிலையில், மெட்டாவின் இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை கவர்ந்துள்ளது.