அறிந்து கொள்ளுங்கள்

இணையத்தில் லீக் ஆன ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்கள்

Published On 2023-02-17 09:01 GMT   |   Update On 2023-02-17 09:01 GMT
  • யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட ஐபோன் 15 ப்ரோ ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • ரெண்டர்களில் உள்ள புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலில் மெல்லிய பெசல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய ஐபோன் 15 ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், 9டு5மேக் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் CAD மாடலில் ஐபோன் 15 ப்ரோ எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. புதிய ரெண்டர் நம்பத்தகுந்த கேஸ் உற்பத்தியாளர் மற்றும் 3D நிபுணர் இயன் செல்போ மற்றும் 9டு5மேக் இணைந்து உருவாக்கி இருக்கிறது.

தற்போதைய ரெண்டரில் ஐபோன் 15 ப்ரோ எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. ரெண்டர் உருவாக்குவதற்கான CAD ஃபைல்கள் ஆப்பிள் சார்பில் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பப்படும். இவற்றை கொண்டு போன் கேஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதும், கேஸ்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதை இது தடுக்கும்.

 

ஏற்கனவே வெளியான தகவல்களை போன்றே புதிய ஐபோன் 15 ப்ரோ யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் கிளாஸ் மற்றும் மெட்டல் ஃபிரேம் ஓரங்கள் வளைக்கப்பட்டு இருக்கின்றன. இவை ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பதை மேலும் சவுகரியமானதாக மாற்றும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் உள்ள கேமரா பம்ப் தற்போதைய மாடலில் இருப்பதை விட தடிமனாக இருக்கிறது.

இதன் மூலம் ஆப்பிள் புதிய ஐபோனின் சென்சார்களை மாற்றி இருக்கலாம் என தெரிகிறது. சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ போன்றே புதிய மாடலிலும் மூன்று கேமரா சென்சார்கள், LiDAR சென்சார் சதுரங்க வடிவம் கொண்ட மாட்யுலில் இடம்பெற்று இருக்கிறது. கேமரா சென்சார்கள் அதிக தடிமனாக இருப்பதால், இவை அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது.

இதே போன்று வால்யும் ராக்கர் மற்றும் மியூட் ஸ்விட்ச்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. வால்யூம் ராக்கர்கள் கேபாசிடிவ் பட்டன்களை போன்று காட்சியளிக்கிறது. இதில் உள்ள மியூட் ஸ்விட்ச் ரிடிசைன் செய்யப்பட்டு, அளவில் சிறியதாகவும், சற்றே வட்ட வடிவமும் கொண்டுள்ளன. புதிய ஐபோன் 15 ப்ரோ ரெசல்யுஷன் 14 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என தெரிகிறது.

புதிய ஐபோன் 15 ப்ரோ அளவில் சிறியதாகவும், மெல்லிய பெசல்களையும் கொண்டிருக்கிறது. இந்த மாடலிலும் ஐபோன் 14 ப்ரோ போன்றே டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. தற்போதைய ரெண்டர்கள் CAD ரெண்டர்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போனின் இறுதி வடிவம் இதே போன்று இருக்கும் வாய்ப்புகள் குறைவு தான்.

Photo Courtesy: 9to5Mac

Tags:    

Similar News