அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் உற்பத்தியாகும் புது ஐபோன் 14

Published On 2022-09-26 08:25 GMT   |   Update On 2022-09-26 08:25 GMT
  • ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் புது ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 14 இருக்கிறது.
  • 2017 முதல் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது.

சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதன் முதலில் ஐபோன் SE மாடல் தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த வரிசையில், ஐபோன் 12, ஐபோன் 13 மாடல்களுடன் ஐபோன் 14 தற்போது புதிதாக இணைந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் மேம்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சென்சார்கள், செயற்கைக்கோள் மெசேஜிங் என ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்களில் ஐபோன் 14 உற்பத்தி இந்தியாவில் அடுத்த சில தினங்களில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் தமிழகத்தின் சென்னை அருகில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் புது ஐபோன் 14 மாடல்கள் உற்பத்தி நடைபெற உள்ளன. சர்வதேச சந்தையில் முன்னணி மின்சாதன உற்பத்தியாளர் மற்றும் மிக முக்கிய ஐபோன் உற்பத்தியாளர் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது.

Tags:    

Similar News