26-வது மாடியில் இருந்து கீழே விழுந்த ஐபோன் 12 ப்ரோ - என்ன ஆனது தெரியுமா?
- ஆப்பிள் நிறுவன சாதனங்கள் அதன் உறுதித்தன்மை மற்றும் தரத்துக்காக உலகம் முழுக்க பிரபலமாக உள்ளன.
- ஐபோன்களின் தரத்தை நிரூபிக்கும் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் அதனை பயன்படுத்துவோர் மூலம் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
சீனாவை சேர்ந்த நிங்டே என்ற பெண் தனது ஐபோன் 12 ப்ரோ மாடல் கட்டிடம் ஒன்றின் 26-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டது. எனினும், கீழே விழுந்த ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நிங்டே தெரிவித்து இருக்கிறார்.
அடுக்குமாடி குடியிருப்பின் 26-ஆவது மாடியில் இருக்கும் போது, பாக்கெட்டில் வைத்திருந்த ஐபோன் 12 ப்ரோ மாடல் தவறி கீழே விழுந்து இருக்கிறது. இந்த சம்பவம் டிசம்பர் 18 ஆம் தேதி அரங்கேறி இருக்கிறது. 26-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தும் ஐபோனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
முன்னதாக ஐபோன்கள் பலமுறை கடல், ஆறு என பல இடங்களில் நீண்ட காலம் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு மீட்கப்பட்ட நிலையிலும், ஐபோனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ளது. சமீபத்திய சம்பவம் ஒன்றில், பயனரின் ஐபோன் சில ஆண்டுகளுக்கு முன் கடலில் விழுந்துள்ளது. தற்போது கரை ஒதுங்கியதில் கண்டெடுக்கப்பட்ட ஐபோன் சீராக இயங்கி அனைவரைுக்கும் ஷாக் கொடுத்தது.
இந்த சம்பவத்தில் 26-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஐபோன் 12 ப்ரோ அடுக்குமாடி குடியிருப்பின் 2 ஆவது தளத்தில் இருந்த ஃபோம் பிளாட்ஃபார்மில் விழுந்துள்ளது. பின் குடியிருப்பின் ஊழியர் உதவியோடு ஐபோனை அந்த பெண் மீட்டுள்ளார். 2 ஆவது தளத்தில் இருந்து மீட்கப்பட்ட ஐபோனின் ஸ்கிரீன் எவ்வித சேதமும் அடையவில்லை என கூறப்படுகிறது.
ஐபோன் 12 ப்ரோ மாடலில் சூப்பர் செராமிக் பேனல், மேட் டெக்ஸ்ச்சர் செய்யப்பட்ட கிளாஸ் பேக் பேனல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஐபோன் 26 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அதனை காப்பாற்றும் என்று கூறிவிட முடியாது. இந்த சம்பவத்தில் கீழே விழுந்த ஐபோன் வேறு ஏதேனும் பொருளில் தடுக்கப்பட்டோ அல்லது உரசிய நிலையிலோ 2 ஆவது தளத்தில் விழுந்திருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.