அறிந்து கொள்ளுங்கள்

இது தெரியாம போச்சே...! இதுக்கு பிக்சல் போனை அப்படியே வாங்கிடலாம் போல...

Published On 2022-08-22 12:15 GMT   |   Update On 2022-08-22 12:15 GMT
  • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
  • சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 43 ஆயிரத்து 999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிக்சல் 6a மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

எனினும், பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை அமேசான் தளத்தில் சற்றே குறைந்த விலையில் வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் பிக்சல் 6a விலை ரூ. 37 ஆயிரத்து 710 என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ப்ளிப்கார்ட் விலையை விட ரூ. 5 ஆயிரம் வரை விலை குறைவு ஆகும். பல்வேறு மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனினை ரூ. 37 ஆயிரம் அல்லது ரூ. 38 ஆயிரம் விலையிலேயே விற்பனை செய்து வருகின்றன.


அமேசான் தளத்தில் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்குவோர் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அமேசான் தளத்தில் வாங்கும் போது பிக்சல் 6a ஸ்மாரட்போனிற்கு வாரண்டி எதுவும் வழங்கப்படாது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

விலை குறைவாக கிடைப்பதால், விற்பனையாளர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட யூனிட்டையும் விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகம். இந்த ரிஸ்க்-களை எடுக்க தயார் எனில், அமேசான் தளத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

Tags:    

Similar News