அறிந்து கொள்ளுங்கள்

இந்தியாவில் 500 பேரை பணிநீக்கம் செய்த அமேசான்!

Published On 2023-05-16 10:45 GMT   |   Update On 2023-05-16 10:45 GMT
  • இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
  • பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

அமேசான் ஊழியர்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார சூழல் காரணமாக அமேசான் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. உலகளவில் பல்வேறு ஊழியர்கள் வேலையிழந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசான் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தியாவில் எத்தனை ஊழியர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இணைய சேவைகள், மனித வளம் மற்றும் சப்போர்ட் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள் இந்தியாவில் வேலையிழந்துள்ளனர்.

 

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜேசியின் ஆரம்பக்கட்ட பணிநீக்க திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணிநீக்க நடவடிக்கையின் கீழ் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஆண்டி ஜேசி அறிவித்து இருந்தார்.

பின் மார்ச் மாதத்தில் அமேசான் நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 9 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஆண்டு ஜேசி அறிவித்தார். சீரற்ற பொருளாதார நிலை காரணமாகவே பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News