கணினி

ஆப்பிளின் பிராசசரில் பாதுகாப்பு குறைபாடு - MIT ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2022-06-13 11:11 GMT   |   Update On 2022-06-13 11:11 GMT
  • M1 பிராசசரில் உள்ள பாதுகாப்பு குறைபட்டிற்கு பேக்மேன் என பெயரிட்டுள்ளனர்.
  • இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிளின் M1 சீரிஸ் சிலிக்கான் புராசசர்கள் அதன் மேக் மினி மற்றும் மேக் புக் ஆகியவற்றில் இருப்பது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் ஐபேடுகளிலும் உள்ளது. அவற்றின், SoC இல் உள்ள இணையப் பாதுகாப்பு பாதிப்பு பல நவீன ஆப்பிள் தயாரிப்புகள் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆப்பிள் WWDC 2022 இல் நிறுவனத்தின் புதிய M2 சிலிக்கான் புராசசர் அறிவித்த பிறகு, ஆப்பிள் M1 சிலிக்கான் இணையப் பாதுகாப்புத் துறையில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி MIT ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.


M1 பிராசசரில் உள்ள பாதுகாப்பு குறைபட்டிற்கு பேக்மேன் என பெயரிட்டுள்ளனர். M1 பிராசசரின் பாயிண்டர் அங்கீகாரக் குறியீடு (PAC) பாதுகாப்பு அமைப்பை மீறுவதனால், M1 இல் உள்ள பாதுகாப்புப் பாதிப்பிற்கு "PACMAN" என்று பெயரிடப்பட்டது.

பாயிண்டர் அங்கீகாரக் குறியீடு என்பது ஒரு பாதுகாப்பு அம்சம், குறிப்பாக CPU ஐப் பாதுகாக்க உதவும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இதுதவிர பாயிண்டர்கள் மெமரி அட்ரஸ்களையும் சேமிக்கின்றன, MIT நடத்திய ஆய்வில் "PACMAN" வெற்றிகரமாக பாயின்டர் அங்கீகார குறியீடுகளை கண்டறிவதோடு இது ஹேக்கர்களுக்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News