கணினி

முழுசா ரூ. 7500 குறைப்பு.. பிளே ஸ்டேஷன் 5 வாங்க சூப்பர் சான்ஸ்..!

Published On 2023-08-21 12:21 GMT   |   Update On 2023-08-21 12:21 GMT
  • சோனி பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்படுகிறது.
  • முன்னதாக இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 மாடல்கள் விலை உயர்த்தப்பட்டது.

சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை வாங்குவதற்கு ஆரம்பத்தில் அதிக கடினமான சூழல் நிலவி வந்தது. எனினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் பி.எஸ். 5 அனைவராலும் வாங்கக்கூடிய அளவுக்கு அதிக யூனிட்கள் கிடைக்கின்றன. தற்போது பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ஸ்டோர்களில் எளிதில் வாங்கக்கூடிய சூழல் தான் நிலவுகிறது.

மேலும் பிளே ஸ்டேஷன் 5 வாங்குவதற்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பிளே ஸ்டேஷன் 5 வாங்க நினைப்பவர்களுக்கு நற்செய்தியை கொடுக்கும் வகையிலான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது.

 

ஆகஸ்ட் 24-ம் தேதி துவங்கி செப்டம்பர் 2-ம் தேதி வரை பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை அமேசான், ஃப்ளிப்கார்ட் வலைதளங்களிலும், ஷாப்அட்எஸ்.சி., ரிலையன்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் விலை குறைப்பு பொருந்தும்.

இந்த விலை குறைப்பு கன்சோலின் டிஸ்க் எடிஷனுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பிளே ஸ்டேஷன் 5 மாடல் அமேசான் வலைதளத்தில் ரூ. 54 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் வலைதளத்திலும் இந்த கன்சோலின் விலை ரூ. 54 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் மாடல் ரூ. 39 ஆயிரத்து 990 என்றும், டிஸ்க் எடிஷன் விலை ரூ. 49 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இவற்றின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News