கணினி
null

பிக்சல் வாட்ச் 2 இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்

Published On 2023-09-09 08:54 GMT   |   Update On 2023-09-09 08:54 GMT
  • பிக்சல் வாட்ச் 2 மாடலுக்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
  • பிக்சல் வாட்ச் 2 விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

கூகுள் நிறுவனம் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர்களை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் பிக்சல் வாட்ச் 2 தோற்றம் மட்டுமின்றி அதன் இந்திய வெளியீடு பற்றிய தகவல்களும் தெரியவந்துள்ளது.

பிக்சல் வாட்ச் 2 மாடலுக்கான டீசர் வீடியோ கூகுள் இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபர் 5-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது.

இத்துடன் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு அக்டோபர் 5-ம் தேதி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு கடந்தமுறை போன்றில்லாமல், பிக்சல் வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தோற்றத்தில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக மாற்றங்களை பெறவில்லை. இந்த மாடலுக்கான பேன்ட்-கள் பிக்சல் 8 ப்ரோ நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News