கணினி

விரைவில் இந்தியா வரும் குறைந்த விலை ஒன்பிளஸ் டேப்லெட்

Published On 2023-09-14 09:07 GMT   |   Update On 2023-09-14 09:07 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
  • புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags:    

Similar News