கணினி

மூன்று நிறங்கள், 8000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் ரெட்மி பேட் SE

Published On 2023-08-12 10:58 GMT   |   Update On 2023-08-12 10:58 GMT
  • ரெட்மி பிரான்டின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
  • புதிய ரெட்மி பேட் SE மாடல் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

ரெட்மி பேட் SE விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த டேப்லெட்- விலை, அம்சங்கள் மற்றும் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தற்போது லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ரெட்மி டேப்லெட் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி பேட் SE மாடலில் ஸ்னாப்டடிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 11 இன்ச் 1200x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 8000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

 

மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர், ஹால் சென்சார் வழங்கப்படுகிறது.

ரென்டர்களின் படி ரெட்மி பேட் SE மாடல் கிரே, கிரீன் மற்றும் பர்பில் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் ரெட்மி பேட் போன்றே காட்சியளிக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News