கணினி

இணையத்தில் லீக் ஆன புதிய தகவல் - சத்தமின்றி உருவாகும் புதிய ஒன்பிளஸ் டேப்லெட்

Published On 2023-09-03 09:15 GMT   |   Update On 2023-09-03 09:15 GMT
  • புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
  • ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.

அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

 

இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.

பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News