கணினி

ஆப்பிள் மேக்புக் மாடலுக்கு ரூ. 30000 தள்ளுபடி.. அமேசான் அதிரடி சலுகை

Published On 2023-10-03 09:01 GMT   |   Update On 2023-10-03 09:01 GMT
  • ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி.
  • மேக்புக் ஏர் மாடலை வாங்குவோருக்கு வங்கி சார்ந்த சலுகையும் அறிவிப்பு.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் துவங்கும் முன்பே, ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை அமேசான் வலைதளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் M1 விலை அதன் முந்தைய விலையை விட 30 சதவீதம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அமேசான் வலைதளத்தில் இந்த மாடல் ரூ. 69 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மையான விலையில் இருந்து 30 சதவீதம் குறைவு ஆகும். இத்துடன் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

 

ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 2 டி.பி. வரை எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் மேக் ஒ.எஸ். வென்ச்சுரா மூலம் இயங்குகிறது.

இத்துடன் 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, டச் ஐ.டி. சென்சார், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 49.9 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.0, 2x யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

Tags:    

Similar News