கணினி
ஆண்ட்ராய்டு 13

ஆண்ட்ராய்டு 13 ரிலீஸ் செய்து மாஸ் காட்டிய கூகுள்

Published On 2022-08-16 11:09 GMT   |   Update On 2022-08-16 11:09 GMT
  • கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஓஎஸ் பிக்சல் போன் பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது.
  • பலக்கட்ட சோதனைக்கு பின் வெளியாகி இருக்கும் புது ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.

பிக்சல் போன் வைத்திருப்பவர்களுக்கு கூகுள் நிறுவனம் முற்றிலும் புதிய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 12 அக்டோபர் 19 ஆம் தேதி வரை வெளியிடப்படாமலேயே இருந்தது. அந்த வகையில், இந்த ஆண்டு புது ஓஎஸ் அப்டேட் யாரும் எதிர்பாராத சமயத்தில் வெளியாகி உள்ளது.

பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு இந்த ஓஎஸ் பல்வேறு பயனுள்ள அம்சங்களை வழங்குகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஏராளமான பிரச்சினையை ஏற்படுத்தி வந்தது.

தற்போது புது ஓஎஸ் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 பீட்டா 4.1 வெர்ஷனிலேயே கைரேகை சென்சார் அதிகளவு மேம்பட்டு இருப்பதை உணர முடிந்ததாக பலர் சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து வந்தனர்.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-இல் சில மூன்றாம் தரப்பு செயலிகளின் ஐகான்கள் போன் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ற வகையில் மாறிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. செயலிகள் எவ்வளவு தகவல்களை சேகரித்து இயக்குகின்றன என்பதை சிறப்பாக இயக்க முடியும். மேலும் குறிப்பிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் க்ளிப்-போர்டு ஹிஸ்ட்ரி போன்ற விவரங்களை சேகரிக்க முடியாது.

Tags:    

Similar News