கணினி

அமேசானில் லீக் ஆன பிக்சல் டேப்லட் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2023-05-08 08:15 GMT   |   Update On 2023-05-08 08:15 GMT
  • கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
  • அமேசான் ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் இரு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

கூகுள் பிக்சல் டேப்லட் மாடல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதே நிகழ்வில் பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஒஎஸ் சார்ந்த அறிவிப்புகளும் வெளியாக இருக்கின்றன. கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற I/O 2022 நிகழ்வில் டேப்லட் மாடலின் டிசைன் விவரங்களை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து கூகுள் பிக்சல் டேப்லட் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. புதிய டேப்லட் விலை பற்றிய தகவல்கள் ரகசியமாக இருந்து வந்தது. புதிய டேப்லட் மாடல் ஆப்பிள், சாம்சங் மற்றும் பல்வேறு மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்த இருக்கிறது. இந்த நிலையில், கூகுள் பிக்சல் டேப்லட் விலை விவரங்கள் அமேசான் ஜப்பான் வலைதளத்தில் தவறுதலாக லீக் ஆகியுள்ளன.

 

அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்களின் படி பிக்சல் டேப்லட் மாடல் ஜப்பான் நாட்டில் ஹசல் மற்றும் போர்சிலைன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் விலை 79 ஆயிரத்து 800 யென்கள் இந்திய மதிப்பில் ரூ. 48 ஆயிரத்து 331 என்று நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் பிக்சல் டேப்லட் மாடல் குறைந்த விலை பிரிவில் இருக்காது என்று தெரியவந்துள்ளது. அமேசான் வலைதள ஸ்கிரீன்ஷாட்டில் இந்த பிக்சல் டேப்லட் மாடல் ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிக்சல் டேப்லட் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

10.9 இன்ச் 1600x2560 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே

கூகுள் டென்சார் 2 சிப்செட்

8 ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்

7000 எம்ஏஹெச் பேட்டரி

அமேசான் ஜப்பான் வலைதளத்தில் பிக்சல் டேப்லட் உடன் சார்ஜிங் ஸ்பீக்கர் டாக் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிக்சல் டேப்லட்-ஐ ஸ்மார்ட் டிஸ்ப்ளேவாக மாற்றுகிறது. இதுபற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Tags:    

Similar News