கணினி

ஏ14 பயோனிக் பிராசஸர், முற்றிலும் புது டிசைன் கொண்ட ஐபேட் அறிமுகம்

Published On 2022-10-19 09:14 GMT   |   Update On 2022-10-19 09:14 GMT
  • ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஐபேட் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த டேப்லெட் மாடல் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய ஐபேட் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐபேட் மாடல் 10.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ14 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் மேம்பட்ட 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

யுஎஸ்பி சி போர்ட் கொண்டிருக்கும் புது ஐபேட் மாடல் வைபை 6 கனெக்டிவிட்டி, 5ஜி செல்லுலார் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. ஐபேட் ஒஎஸ் 16 கொண்டிருக்கும் புதிய ஐபேட் மாடலுடன் ஆப்பிள் பென்சில் முதல் தலைமுறை மாடலுக்கான சப்ரோர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஐபேட் (10th Gen) அம்சங்கள்

10.9 இன்ச் 2360x1640 பிக்சல் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே

ஏ14 பயோனிக் பிராசஸர்

64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி

ஐபேட் ஒஎஸ் 16

12MP பிரைமரி கேமரா

12MP செல்பி கேமரா

டூயல் மைக்ரோபோன்

5ஜி (ஆப்ஷன்), வைபை 6, ப்ளூடூத் 5.2

டச் ஐடி

28.6 வாட் லித்தியம் அயன் பேட்டரி

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய ஐபேட் மாடல் புளூ, பின்க், சில்வர் மற்றும் எல்லோ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஐபேட் மாடல் விலை ரூ. 44 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 ஆகும்.

Tags:    

Similar News