திருமணமான பெண்கள் பிறந்த வீட்டில் இருந்து எடுத்துச் செல்லக் கூடாதவை
- குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
- உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்து செல்லக் கூடாதாம்.
திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் நிச்சயமாக ஏதாவது ஒன்றை எடுத்து செல்வார்கள். அது மளிகை பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அவர்களது மனதிற்கு பிடித்த பொருளாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் புழங்கிய பொருளாகவும் இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட பொருட்களை மட்டும் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு செல்லக் கூடாதாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
* உப்பு மற்றும் புளி : எந்த காரணம் கொண்டும் நிச்சயமாக கொண்டு செல்லக் கூடாதாம். அப்படி கொண்டு சென்றால் பிறந்த வீட்டில் உள்ள மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறி விடுவாள் என்பது நம்பிக்கை.
* உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாதாம்.
* நல்லெண்ணெய்: பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அது பெரிதாகிவிடும்.
* கசப்பு தன்மையுள்ள காய்கறிகள், கீரைகள் : அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாது என்கின்றனர். இதனால் தேவையில்லாத மனக்கசப்புகள் உண்டாகும் என்பது சாஸ்திர நியதி.
* பூஜை பொருட்கள் : பிறந்த வீட்டின் குலதெய்வப் படங்கள் அல்லது சிலைகள், பூஜை பொருட்கள், விளக்கு முதலானவற்றை கொண்டு செல்லக் கூடாது. பயன்படுத்தாத பொருட்களாக இருந்தால் எடுத்துச் செல்லலாம். ஒரு வீட்டில் ஏற்றிய விளக்கை எப்போதும் மற்றொரு வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி செய்தால் லட்சுமி கடாட்சம் மங்கிவிடும்.
* குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், அதற்கான வழிபாடு அங்கேயே தொடர வேண்டும். திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
* இரும்பு மற்றும் கூர்மையான பொருட்கள்: கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்பு பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் பிறந்த வீட்டாருக்கும் புகுந்த வீட்டாருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.
* துடைப்பம், முறம்: வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், மாப் மற்றும் அரிசி அளக்க பயன்படுத்தும் படி , புடைக்க முறம் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும்.
* கோல மாவு : இப்போதெல்லாம் கோலம் போடுவதே குறைந்துவிட்டது எனினும் சிலர் அவ்வழக்கத்தை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். பிறந்த வீட்டில் இருந்து கோலமாவை இலவசமாக எடுத்து வருதல் என்பது கூடாது. வேண்டுமென்றால் இதற்கான தொகையை தாயிடம் கொடுத்துவிட்டு எடுத்து வரலாம்.