மதுரோவைப் போல புதினை அமெரிக்கா கைது செய்யுமா?.. டிரம்ப் பதில்
- அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
- ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கப் படைகள் கைது செய்துள்ள நிலையில், அடுத்த இலக்கு ரஷிய அதிபர் புதின் என ஜெலன்ஸ்கி மறைமுகமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதினை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கான அவசியம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
அவருடன் எப்போதும் ஒரு சிறந்த உறவை வைத்திருக்கவே விரும்பினேன். ஆனால் தற்போதைய நிலைமை ஏமாற்றமளிக்கிறது. உக்ரைன்-ரஷிய போரைத் தடுக்க முடியாததில் எனக்கு வருத்தம் உண்டு" என்று கூறினார்.
ரஷியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், பல ரஷிய வீரர்கள் போரில் கொல்லப்படுவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப் , இந்தப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.
உக்ரைனில் செய்த போர் குற்றங்களுக்காக ரஷிய அதிபர் புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.