உலகம்

"ஜம்மு காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் அல்ல, சட்டப்பூர்வமான சுதந்திர போராட்டம்" - பாகிஸ்தான் ராணுவ தளபதி

Published On 2025-07-01 04:00 IST   |   Update On 2025-07-01 04:01:00 IST
  • காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்துகிறது.
  • காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்

ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் ஒரு சட்டபூர்வமான போராட்டம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.

கராச்சியில் உள்ள கடற்படை அகாடமியில் நடந்த விழாவில் பேசிய முனீர் "இந்தியா பயங்கரவாதம் என்று அழைப்பது உண்மையில் ஒரு சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டமாகும்.

சர்வதேச சட்டம் அதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் இந்த இயக்கத்தை மேலும் முக்கியத்துவப்படுத்த மட்டுமே உதவும்" என்று கூறினார்.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் முனீர் கூறினார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தான் தன்னை நிரூபித்துள்ளதாகவும் முனீர் தனது உரையில் கூறினார்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2019 பாலகோட் தாக்குதலையும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரையும் முனீர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News