உலகம்

ஐ.நா. சபை பொதுக்கூட்டம்: பாலஸ்தீன அதிபரின் அமெரிக்க விசா ரத்து - காரணம் இதுதான்!

Published On 2025-08-30 18:48 IST   |   Update On 2025-08-30 18:48:00 IST
  • அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கவில்லை.
  • சமீபத்தில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன.

அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பல நாடுகள் அறிவித்துள்ளன. 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் ஏற்கனவே பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன.

ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஆஸ்திரேலியா நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.

அமெரிக்காவும் சில மேற்கத்திய நாடுகளும் மட்டுமே அங்கீகரிக்கவில்லை. சமீபத்தில், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியுள்ளன.

இந்நிலையில், ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பங்கேற்கவிடாமல் தடுக்க, அவரின் விசாவை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த செயல் பாலஸ்தீனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News