உலகம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆண்டு வருமானம் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா?

Published On 2025-04-01 10:58 IST   |   Update On 2025-04-01 10:58:00 IST
  • ஆண்டு வருமானம், செலவீனங்கள் ஆகியவை குறித்து அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஜெலன்ஸ்கியின் குடும்ப வருமானம் கடந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது.

உக்ரைன் அரசு அதிகாரிகள் வருடா வருடம் தங்கள் சொத்து விவரங்களைக் கட்டாயம் வெளியிட வேண்டும். அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டுக்கான தனது குடும்ப வருமானத்தை வெளியிட்டுள்ளார்.

ஜெலன்ஸ்கியின் குடும்ப சொத்துக்கள், ஆண்டு வருமானம், செலவீனங்கள் ஆகியவை குறித்து அதிபர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜெலன்ஸ்கியின் குடும்ப வருமானம் 2024 இல் 15,286,183 (15.3 மில்லியன்) ஹ்ரிவ்னியா -க்கள் (368,556 டாலர்) (சுமார் 3.1 கோடி ரூபாய்) ஆக உள்ளது.

இதில் ஜெலன்ஸ்கியின் வருமானம், வங்கி இருப்புத் தொகை மூலம் கிடைக்கும் வட்டி, குடும்ப ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வாடகை ஆகியவை அடங்கும். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஜெலன்ஸ்கியின் குடும்ப வருமானம் கடந்த ஆண்டு அதிகரித்துக் காணப்படுகிறது.

கடந்த 2022 இல் ரஷியாவுடன் உக்ரைன் போர் தொடங்கியபோது நிறுத்திவைக்கப்பட்டு, தொய்வடைந்த அவரின் தனியார் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வாடகை வருமானம் கடந்த ஆண்டு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததால் குடும்ப வருமானம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags:    

Similar News