உலகம்

ஒபாமா ஆட்சி காலத்தில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது- டிரம்ப் குற்றச்சாட்டு

Published On 2025-05-25 12:59 IST   |   Update On 2025-05-25 12:59:00 IST
  • ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தின் அதிகாரிகளாக நீங்கள் உள்ளீர்கள். ஏனென்றால் நான் அந்த ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினேன். நாங்கள் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு, அமெரிக்காவின் எதிரிகளை நசுக்குவது மற்றும் நமது சிறந்த அமெரிக்கக் கொடியை பாதுகாப்பது போன்ற அதன் முக்கிய பணியில் நமது ராணுவத்தை கவனம் செலுத்த வைக்கிறோம்.

ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வடிவமைக்கும் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் அவற்றை உருவாக்குகிறோம்.

ஆனால் இதற்கு முன்பு ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது. அதை ரஷியர்கள் திருடினர். அப்போது மோசமான விஷயம் நடந்தது. ஆனால் தற்போது நாங்கள் அவற்றை நிறைய (ஏவுகணை) உருவாக்குகிறோம்.

அமெரிக்க ஆயுதப்படைகளின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்றுவது அல்ல. அதன் முக்கிய பணி தேசிய பாதுகாப்பு ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News