உலகம்

பணக்காரர் பட்டியலில் 3-ஆம் இடத்தில் எலான் மஸ்க்

Published On 2024-03-09 09:46 GMT   |   Update On 2024-03-09 09:46 GMT
  • பட்டியலில் முதல் இடத்தில் லூயி வியுட்டன் CEO பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்
  • பணக்காரர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளார்

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி கோடீசுவரரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க் (52) உலக பணக்காரர்கள் வரிசையில் தற்போது 3-ஆம் இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில் பிரான்ஸ் நாட்டின் ஃபேஷன் ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான லூயி வியுட்டன் (Louis Vuitton) நிறுவன தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) உள்ளார். இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (Jeff Bezos) உள்ளார்.

2022 அக்டோபர் மாதம் அமெரிக்காவை மையமாக கொண்ட பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கினார். அதன் பெயரை டுவிட்டர் என்பதிலிருந்து எக்ஸ் என மாற்றி வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

ஆனால், மஸ்க் எடுத்து வரும் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை.

இந்நிலையில், எலான் மஸ்கின் நிகர மதிப்பு $189 எனும் அளவில் உள்ளது. இதன் மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

டெஸ்லாவின் பங்கு சந்தை மதிப்பு, கடந்த ஒரு வருடமாக சரிய தொடங்கி இதுவரை 29 சதவீதம் விழுந்துள்ளது. டெஸ்லாவில் எலான் மஸ்க் வைத்திருக்கும் 21 சதவீத பங்குகள்தான் அவரது வருவாயில் பெரும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News