உலகம்

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

Published On 2025-12-26 10:52 IST   |   Update On 2025-12-26 10:52:00 IST
  • மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
  • தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

டொராண்டோ:

இந்தியாவை சேர்ந்த மாணவர் சிவாங்க் அவஸ்தி (வயது 20). கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்த நிலையில் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வளாகம் அருகே மாணவர் சிவாங்க் அவஸ்தி உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவர் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் பிணமாக கிடந்த ஹைலேண்ட் கிரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலைப் பகுதியில் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதில் மாணவர் சிவாங்க் அவஸ்தியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்று உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக டொராண்டோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த முனைவர் பட்ட மாணவர் சிவாங்க் அவஸ்தி உயிரிழந்தது குறித்து நாங்கள் ஆழ்ந்த வேதனை அடைந்து உள்ளோம்.

இந்தக் கடினமான நேரத்தில் துணைத் தூதரகம் அவரது துயரமடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்று தெரிவித்து உள்ளது.

கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொராண்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி பெண் ஹிமான்ஷி குரானா அவரது ஆண் நண்பரால் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News