உலகம்

வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனா கட்சி போட்டியிட தடை: அமெரிக்கா கண்டனம்

Published On 2025-12-26 05:20 IST   |   Update On 2025-12-26 05:20:00 IST
  • வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
  • பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட அந்நாடு தடை விதித்தது.

டாக்கா:

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவாமி லீக் கட்சியினர் பங்குகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷேக் ஹசீனா கட்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக்குழு உறுப்பினர்கள் வங்கதேச பிரதமர் முகமது யூனுசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தங்களுக்கு தேவையான அரசை அமைக்க வங்கதேச மக்களுக்கு உரிமை உள்ளது. அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News