உலகம்

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: யூனுஸ் அரசு மீது ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

Published On 2025-12-26 12:30 IST   |   Update On 2025-12-26 12:30:00 IST
  • ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்காளதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • சிறுபான்மையினரை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இந்த நிலையில் வங்காள தேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மீது முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டி உள்ளார்.

சட்டவிரோதமாக அதி காரத்தை கைப்பற்றியுள்ள இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினருக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. ஒரு காலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்காளதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரத்தில் யூனுஸ் அரசாங்கம் தலை யிடுகிறது. இது சிறுபான்மையினரை உயிருடன் எரித்துக் கொல்வது போன்ற கொடூரமான முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த இருண்ட காலம் இனியும் தொடர வங்காள தேச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News