உலகம்

அத்துமீறி டிரோன் தாக்குதல்: வடகொரியா குற்றச்சாட்டை மறுத்த தென் கொரியா

Published On 2026-01-11 02:24 IST   |   Update On 2026-01-11 02:24:00 IST
  • தென் கொரிய டிரோனை சுட்டு வீழ்த்தியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
  • அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என தென்கொரியா மறுத்துள்ளது.

சியோல்:

தங்களது வான்பரப்பில் தென் கொரியாவின் டிரோன் அத்துமீறி பறந்தது என வடகொரியா குற்றம் சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வடகொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் கொரியாவின் டிரோன்கள் எல்லை தாண்டி வந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பறந்ததாக கூறப்பட்டது. அந்த டிரோன்கள் தங்கள் நாட்டில் உள்ள முக்கிய இடங்களை புகைப்படம் எடுத்ததாகவும் கூறிய வடகொரியா, உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், அந்த டிரோன் தங்களுடையது அல்ல. வடகொரியாவைத் தூண்டும் எண்ணம் தங்களுக்கு இல்லை என தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவும் தென்கொரியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News